புதிய டிரான்ஸ்பார்மர் இயக்கி வைப்பு 

புதுச்சேரி: நேதாஜி நகர், சூளைமேடு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மரை சபாநாயகர் அன்பழகன் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். 

உப்பளம் தொகுதி நேதாஜி நகர், சூளைமேடு பகுதியில் இயங்கி வந்த குறைந்த மின்னழுந்த டிரான்ஸ்பார்மர் அகற்றப்பட்டு, ரூ.26 லட்சத்து 42 ஆயிரத்து 451 மதிப்பிட்டில் புதைவட கேபிளுடன், புதிதாக அமைக்கப்பட்ட டிரான்ஸ்பார்மர் இயக்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 

நிகழ்ச்சிக்கு, தொகுதி எம்.எல்.ஏ.,வும், சபாநாயகருமான அன்பழகன் தலைமை தாங்கி, புதிய டிரான்ஸ்பார்மரை பூஜை செய்து மக்கள் பயன்பாட்டிற்கு  இயக்கி வைத்தார்.

இதில், மின்துறை செயற்பொறியாளர் திலகராஜ், உதவி செயற்பொறியாளர் தணிகைவேலன், இளநிலை பொறியாளர் மூர்த்தி, அ.தி.மு.க., மாநில துணைசெயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நேத்தாஜி நகர் வார்டு செயலாளர் பிரகாஷ், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

Advertisement