புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் 7ம் தேதி குறைகேட்பு முகாம்
புதுச்சேரி: புதுச்சேரி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்களின் குறை கேட்பு வரும் 7ம் தேதி காலை 11.30 மணியளவில் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இது குறித்து புதுச்சேரி கோட்டம் அஞ்சலங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
அஞ்சல் வாடிக்கையாளர்கள் அஞ்சல் துறை சேவையில் மணியார்டர், ஸ்பீடு போஸ்ட், லெட்டர், பார்சல் உள்ளிட்ட குறைகள் ஏதேனும் இருப்பின் இந்த முகாமில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.
வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள், ஆலோசனைகளை நாளை 5ம் தேதிக்கு முன்பாக பாண்டிச்சேரி கோட்ட அஞ்சல் அலுவலகங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அனுப்பலாம்.
மேலும், www.indiapost.gov.in மற்றும் dopondicherry.tn@indiapost.gov.in என்ற இணையதளம், இ–மெயில் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம். அனைத்து புகார்களும் அஞ்சல் குறை கேட்பு புகார் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு, 0413-–2334837, 0413–2337017, 0413-–2225373 உள்ளிட்ட தொலை பேசி எண்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.