சிலிண்டர் லோடு மினி லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்து
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காஸ் சிலிண்டர்கள் ஏற்றிச்சென்ற மினி வேன் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
முடியனுார் அடுத்த குரூர் கிராமத்தில் தனியார் காஸ் நிறுவனத்தை சேர்ந்த லோடு வாகனம் நேற்று மாலை 5:00 மணியளவில் சிலிண்டர் விநியோகித்து விட்டு சென்றது. குரூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில், சிலிண்டர்கள் தரையில் உருண்டோடியது. இந்த விபத்தில் டிரைவர் காயமின்றி தப்பினார்.
சம்பவ இடத்திற்கு ஜே.சி.பி., இயந்திரம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்த வேன் மீட்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement