கொப்பரை தேங்காய் ஏலம்

நத்தம், செப்.4-

நத்தம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடந்தது. விற்பனை கூட மேற்பார்வையாளர் மாரிமுத்து தலைமை வகித்தார். தேங்காய் பருப்பின் தரத்திற்கேற்ப அதிகபட்சமாக ரூ.158-க்கும் குறைந்தபட்சமாக ரூ.155-க்கும் ஏலம் போனது. தேங்காய் தொட்டி கிலோ அதிகபட்சமாக ரூ.37-க்கும் குறைந்தபட்சமாக ரூ.33-க்கும் விற்றது. மொத்தமாக 1140 கிலோ கொப்பரை தேங்காய் வரப்பெற்று ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்திற்கு ஏல விற்பனை நடந்தது. உள்ளூர், வெளிமாவட்ட வியாபாரிகள் பங்கேற்றனர்.

Advertisement