மணக்குள விநாயகர் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்பு துவக்கம்
புதுச்சேரி: மதகடிபட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றார். மணக்குள விநாயகர் அறக்கட்டளை செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், தக் ஷ சீலா பல்கலைக்கழக இணை வேந்தர் நிலா பிரியதர்ஷினி, வைஷ்ணவி ராஜராஜன், சூர்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக டி.சி.எஸ்., நிறுவனத்தின் சைபர் செக்யூரிட்டி பிசினஸ் பார்ட்னர் தீபக் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றார்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மலர்க்கண் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழாவில், கல்லுாரி வேலைவாய்ப்பு டீன் கைலாசம், கல்லுாரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து பேசினார். சிறப்பு விருந்தினர் தீபக் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், மாணவர்கள் முதல் ஆண்டிலிருந்தே கல்வி கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். நுாலகப் பயன்பாட்டின் மூலம் அறிவையும், வளர்ந்து வரும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்த அறிவையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும்’ என்றார்.
நிகழ்ச்சியில் அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்