டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
அல்மாட்டி: டபிள்யு.டி.டி., கன்டெண்டர் தொடரில் இரண்டாவது சுற்றுக்கு சிண்ட்ரெல்லா முன்னேறினார்.
கஜகஸ்தானில் டபிள்யு.டி.டி., சார்பில் 'கன்டெண்டர்' டேபிள் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் சிண்ட்ரெல்லா, ரஷ்யாவின் ஆல்காவை சந்தித்தார். இதில் சிண்ட்ரெல்லா, 3-0 (11-7, 11-9 11-7) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தியாவின் ஸ்வஸ்திகா 3-1 என (13-11, 11-7, 5-11, 11-7), இத்தொடரின் 'நம்பர்-4' வீராங்கனை, ஜப்பானின் மியு கிஹாராவை வென்றார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் தியா சிட்டாலே, தென் கொரியாவின் டங் சுவானிடம் 2-3 என (7-11, 5-11, 11-8, 11-4, 9-11) போராடி தோல்வியடைந்தார்.
பெண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சிண்ட்ரெல்லா, சுதிர்த்தா ஜோடி, 3-1 (11-5, 11-3, 10-12, 11-7) கஜகஸ்தானின் டார்யா, மரியா ஜோடியை வென்றது. இந்தியாவின் தியா, யாஷஸ்வினி ஜோடி 3-0 (11-8, 12-10, 11-7) என ரஷ்யாவின் அரினா, அலினா ஜோடியை சாய்த்தது. அரையிறுதியில் இந்தியாவின் இரண்டு ஜோடியும் மோத உள்ளன