'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
பாட்யாலா: ஆசிய விளையாட்டுக்காக இந்திய வீரர், வீராங்கனைகள் சிறிய 'கன்டெய்னரில்' தங்கி, தயாராகி வருகின்றனர்.
ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில் 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. 17,000 பேர் பங்கேற்க உள்ளனர். வழக்கமாக இவர்கள் தங்குவதற்கு விளையாட்டு கிராமம் கட்டப்படும்.
இம்முறை செலவுகளை குறைக்கும் வகையில் கப்பல், கன்டெய்னர் வடிவ சிறிய அறைகளில் தங்க வைக்கப்பட உள்ளனர். இந்த சூழலுக்கு ஏற்ப மாறுவது சவாலாக இருக்கும்.
சிறப்பு ஏற்பாடு
இதற்கேற்ப தயாராகும் வகையில் இந்திய நட்சத்திரங்களுக்கு சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. ஜப்பானில் உள்ளது போன்ற மாதிரி 'கன்டெய்னர்', பெங்களூரு, பாட்யாலாவில் உள்ள விளையாட்டு ஆணையத்தில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் பளுதுாக்குதல், தடகள போட்டிகளுக்கான உபகரணங்கள் இதில் வைக்கப்பட்டு இருந்தன.
தற்போது, வீரர், வீராங்கனைகள், இரவில் இங்கு தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், ஜப்பான் சென்றவுடன் ஏதோ ஒரு இடத்தில் அடைபட்டது போல, மூச்சுத் திணறல், சோர்வு, நெருக்கடி உட்பட எவ்வித வித்தியாசமான உணர்வும் இல்லாமல் போட்டிகளில் பங்கேற்கலாம்.
ஆசிய விளையாட்டில் இரு முறை சாம்பியன் ஆன குண்டு எறிதல் வீரர் தஜிந்தர்பால் சிங், தனது அனுபவம் குறித்து கூறுகையில், ''வெளியில் இருந்து பார்க்கும் போது, சிறிதாக தெரிந்தாலும் உட்பகுதி நன்றாக உள்ளது. தேவையான வசதிகள் உள்ளன,'' என்றார்.
வசதி எப்படி
குளிரூட்டப்பட்ட 13 மீ., நீளம், 3 மீ., அகலம் கொண்ட 'கன்டெய்னரில்' தடுப்பு அமைக்கப்பட்டுள்ளன. 6 அடிக்கு சற்று நீளமாக, அருகருகே இரு படுக்கைகள் உள்ளன. உயரம் குறைவான இதில், அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு எதுவும் இருக்காது. அறைக்கு வெளியே வாஷிங் மெஷின், குளியல், கழிப்பறை வசதிகள் உள்ளன.
கடினமாக இருந்தது
காமன்வெல்த் வட்டு எறிதலில் வெண்கலம் வென்ற சீமா கூறுகையில்,'' இங்கு இரண்டு இரவுகள் தங்கினேன். மிகவும் சிறிதாக உள்ளது. சற்று கடினமாக இருந்தது. விளையாட்டு நட்சத்திரங்கள் தங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியது இருக்கும். அப்போது தான் வெற்றியை அடைய முடியும்,'' என்றார்.
மேலும்
-
மாணவர் திறமையைக் கண்டறியுங்கள்; தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்
-
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது; ஊழல்வாதிகளுக்கு கிடையாது; அமைச்சர் நிர்மல்குமார்
-
“கப்பலோட்டிய தமிழன்” வ.உ.சி பிறந்தநாள் இன்று: நினைவு கூர்ந்த முதல்வர் விஜய், ஸ்டாலின்
-
சொல்கிறார்கள் –––––––––––––– ‘உயிரை காப்பாற்றிய சிட்டு குருவிகளுக்கு சரணாலயமான வீடு!’ ––––––––––––––
-
சொல்கிறார்கள் –––––––––––––––– ‘மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!’ –––––––––----–––––––
-
வார இறுதி நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு