பள்ளி உணவு தயாரிப்பு கூடத்தில் ஆய்வு

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலராக இருந்த கலைவாணி அரியலுாருக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி டாக்டர் முத்துக்குமார் பதவி உயர்வில் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு பொறுப்பேற்று கொண்டார்.

தொடர்ந்து அவர் மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு உணவு தயாரிக்கும் கூடம், திண்டுக்கல் நேருஜி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு தயாரிக்கும் சமையல் கூடத்தை பார்வையிட்டார். அங்கு 1,650 மாணவர்களுக்கு தயாரித்த காலை உணவை ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமார் கூறுகையில், 'சுகாதாரமான முறையில் உணவை தயாரிக்க வேண்டும். செயற்கை நிறம் சேர்த்த உணவு, கலப்பட உணவுப் பொருள் விற்பனை தொடர்பாக 94440 42322 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கூறலாம்' என்றார்.

Advertisement