மத்திய பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் கலெக்டர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டு வசதிகள் குறித்து கேட்டறிந்தார். 



திருப்பூர், காமராஜ் ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று கலெக்டர் மணிஷ் நாரணவரே திடீர் ஆய்வு மேற்கொண்டார். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்கள் முறையாக நிறுத்தி எடுக்கப்படுகிறதா, பஸ்கள் புறப்படும் நேரம் உள்ளிட்ட விவரங்கள் முறையாக பயணிகள் அறியும் வகையில் அறிவிக்கப்படுகிறதா, கழிப்பிடங்கள் பராமரிப்பு, குடிநீர் வசதி, இருக்கை வசதி பயணிகள் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து அவர் ஆய்வு நடத்தி விவரங்கள் கேட்டறிந்தார்.



இதுதவிர, உரிய அதிகாரிகள் கண்காணிப்பு மேற்கொள்ளவும், பயணிகள் வசதியை முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார். ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் அமித்,  போக்குவரத்து துணை கமிஷனர் ராஜராஜன், வடக்கு போக்குவரத்து அலுவலர் கவின் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர். 

Advertisement