விபத்தில் 20 தொழிலாளர்கள் காயம்: எம்.எல்.ஏ., நேரில் ஆறுதல்
விழுப்புரம்: விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை, லட்சுமணன் எம்.எல்.ஏ., நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விழுப்புரம் அருகே தென்குச்சிபாளையத்தை சேர்ந்த நேற்று காலை நடந்த விபத்தில், சவுக்கு வெட்டும் தொழிலாளர்கள் ஆறுமுகம், புருஷோத்தமன் ஆகியோர் இறந்தனர்.
இந்த விபத்தில், 20 பேர் பலத்த காயமடைந்தனர்.
இவர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த லட்சுமணன் எம்.எல்.ஏ., முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு நேரில் சென்று, விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை நிலவரங்களை கேட்டறிந்து, துரிதமாக தக்க சிகிச்சையளிக்கும்படி அறிவுறுத்தினார்.
ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட பொறுப்புக்குழு கண்ணன், சம்பத் மற்றும் ஒன்றிய செயலர்கள், நகர செயலர்கள் மற்றும் கட்சியினர் உடனிருந்தனர்.