கணவர் இறந்த சோகத்தில் மனைவியும் தற்கொலை

கிள்ளை: கணவர் இறந்த சோகம் தாங்காமல் மனைவி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிள்ளை அடுத்த மடுவங்கரை கிராமத்தை சேர்ந்தவர் தெய்வீகன்,42; பெயிண்டர். இவரது, மனைவி ஜெனித்தா,38; இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் தம்பதிக்குள் குடும்ப பிரச்னை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. அவ்வாறு கடந்த 30ம் தேதி மீண்டும் பிரச்னை ஏற்பட்டது.

அதில் விரக்தியடைந்த தெய்வீகன் வீட்டிலேயே துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் இருந்த ஜெனித்தா நேற்று வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து, கிள்ளை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement