ஆட்டோ டிரைவர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

புதுச்சேரி: ஆட்டோ டிரைவர் கொலை  வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி  கோவிந்தசாலையை சேர்ந்தவர் ஆனந்த் 35,  ஆட்டோ டிரைவர். இவரை கடந்த 30ம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில் ஒரு கும்பலால், உப்பனாறு மேம்பாலத்தில் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் ஆட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி,23; உள்பட 6 பேரை கைது செய்தனர்.  மேலும் இவ்வழக்கில்  பண்டசோழநல்லுாரை சேர்ந்த முத்து,25; என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர். 

Advertisement