மயங்கி விழுந்த எகிப்து வீராங்கனை

டரன்டோ: ஐரோப்பா, ஆசியா, ஆப்ரிக்க கண்டங்களுக்கு இடையே அமைந்துள்ள மத்திய தரைக்கடல் நாடுகள் பங்கேற்கும் 'தி மீடிடெரனியன்' விளையாட்டு இத்தாலியின் டரன்டோ நகரில் நடக்கிறது. 26 நாடுகளில் இருந்து 3,854 பேர் பங்கேற்றுள்ளனர்.
பெண்களுக்கான 61 கிலோ பளுதுாக்குதல் போட்டி நடந்தது. எகிப்து சார்பில் நோரா எசாம் ஹெல்மே, 23 வயதுக்கு உட்பட்ட பிரிவில் பங்கேற்றார். கிளீண் அண்டு ஜெர்க் பிரிவில் பளுதுாக்கினார். அப்போது தோள்வரை துாக்கிய நோரா, திடீரென எடையை அப்படியே கீழே போட்டு விட்டு, மயங்கி கீழே விழுந்தார்.
கடினமான முயற்சியின் போது, சுவாசத்தில் ஏற்பட்ட தவறு காரணமாக இதுபோல நேர்ந்துள்ளது. ஆக்சிஜன் அளவு பற்றாக்குறை காரணமாக, ரத்த ஓட்டத்தில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவ குழுவினர் சிகிச்சை தர, எவ்வித காயமும் இன்றி மீண்டு வந்தார்.

Advertisement