தேசிய சிலம்பம் மாணவி வெற்றி 

ராமநாதபுரம்: கேரள மாநிலம் மூணாறில் இந்திய இளைஞர் பாரம்பரிய சிலம்பம் சங்கம் சார்பில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது.

இதில், 14 வயதிற்கு உட்பட்ட ஒற்றை கம்பு பிரிவில் ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி கனிஷ்கா முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மாணவியை முதல்வர் எட்வர்ட் பிரான்ஸிஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Advertisement