முருகன் கோயில்களில் கார்த்திகை வழிபாடு
ராமநாதபுரம்: கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் முருகன் கோயில்களில் சிறப்பு அபிேஷகம், பூஜை வழிபாடு, அன்னதானம் நடந்தது.
ஆவணி மாதம் கார்த்திகையை முன்னிட்டு ராமநாதபுரம் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோயிலில் காலை, மாலை நேர பூஜைகளில் பால், தயிர், சந்தனம், பழங்களால் சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது. ராமநாதபுரம் முகவை ஊருணி அருகேயுள்ள பாலசுப்பிரமணிய சுவாமி கோயில், வழிவிடுமுருகன் கோயில், குமரய்யா கோயில், வெளிப்பட்டணம் பாலசுப்பிரமணியம் சுவாமி, பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் மற்றும் பட்டணம்காத்தான் வினை தீர்க்கும் வேலவர் கோயில், கலெக்டர் அலுவலக வளாகம் நீச்சல் குளம் அருகேயுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் முருகப்பெருமானுக்கு அபிேஷகம் அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கினர்.பக்தர்கள் பலர் பங்கேற்றனர்
திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் முருகன் சன்னதி, நம்புதாளை பாலமுருகன், ஆந்தகுடி முருகன், திருத்தேர்வளை ஆண்டுகொண்டேஸ்வரர் கோயில் முருகன் சன்னதிகளில் ஆவணி கிருத்திகையை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. முருகன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ஏராளமான பக்தர்கள் முருகன் பக்தி பாடல்களை பாடினர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்