ஸ்டிக்கர் திட்டங்களை நிறைவேற்றிய புகழ் திமுக.,வை தான் சேரும்..: அந்துமணி பதில்கள்
@block_G@
'எங்கள் தலைவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு, திறப்பு விழா மட்டும் தான் நீங்கள் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை, ஒரு செங்கலைக் கூட நீங்களாக எடுத்து வைக்கவில்லை' என, தி.மு.க.,வைச் சேர்ந்த, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, த.வெ.க.,வையும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவையும் குற்றம் சாட்டுகிறாரே?block_G
'திட்டங்களைக் கொண்டு வந்து, அதையும் நிறைவேற்றாமல் விட்டு விட்டோம்' என்பதைச் சொல்லாமல் சொல்கிறார் மேயர் பிரியா! அதை விடுங்கள்... 'ஸ்டிக்கர்' திட்டங்களை நிறைவேற்றிய புகழ், தி.மு.க.,வை தான் சேரும்... இல்லையா மோகன்!
@block_B@
'மின்மினிப் பூச்சிகள் நிரந்தரம் கிடையாது. சூரியன் தான் நிரந்தரம்' என்று, தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளாரே?block_B
ஆதங்கத்தில் ஏதேதோ பேசுகிறார்... சூரியனும் மாலை நேரங்களில் மறைந்து விடுகிறதே. அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார் ஸ்டாலின்?
@block_Y@
'சட்டசபையில் துறை சார்ந்த உயர் அலுவலர்கள், கேள்வி நேரத்தின்போது இருக்க வேண்டும்' என, தி.மு.க., உதயநிதி, சபாநாயகரிடம் கோரிக்கை வைத்துள்ளாரே?block_Y
உதயநிதி கேட்டிருப்பது சரியே. கேள்வி நேரங்களில், துறை சார்ந்த செயலர்களும், அதிகாரிகளும், சட்டசபையில், 'ஆபீசர்ஸ் கேலரி' என்று அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் இருக்க வேண்டும் என்பது சட்டசபை மரபு. அப்போது தான், என்ன பிரச்னை குறித்து எம்.எல்.ஏ.,க்கள் கேள்வி கேட்கின்றனர் என்பது புரியும்; பதில் சொல்லவும் முடியும். சபாநாயகர் பிரபாகரும் அந்த உத்தரவை பிறப்பித்துள்ளாரே!
@block_P@
'என்னைப் புகழாமல், மக்கள் பிரச்னைகளைப் பற்றி மட்டும் பேசுவதற்கு அனுமதியுங்கள்' என்று சபாநாயகரிடம், முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளாரே?block_P
நல்லது தானே. மக்கள் பிரச்னைகளைப் பற்றி பேசுவதற்காக தானே சட்டசபை இருக்கிறது. தனி நபரைப் புகழ்ந்து பாடும் இடம் அல்ல அது. சட்டசபையில், பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா போல் பேச, அனைவரும் பயிற்சி பெற வேண்டும். அதை விடுத்து, மாமன், மச்சான் கதை பேசி நேரத்தை வீணடிக்கக் கூடாது.
@block_G@
மாநில துப்பாக்கி சுடும் போட்டியில், சென்னை போலீசார் அசத்தியுள்ளனரே?block_G
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துப்பாக்கி சுடுவதில் வல்லவர். காவல்துறை இளைஞர்கள், தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்கும் வகையில், அவர்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார். அது தான் காவலர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்திருக்கிறது. நம் டி.ஜி.பி., மகேஷ்குமார் அகர்வாலும், துப்பாக்கி சுடும் போட்டிகளில், பல வெற்றிகளைக் குவித்தவர்.
அந்துமணி அய்யா, உங்களை வாரமலரில் மட்டுமே பார்க்க முடியும். இப்போது தினமும் தரிசனம் தருகிறீர்கள், எப்படி?
சில உதாரணங்கள்: பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்திலிருந்து, ரேஷன் அரிசி விநியோகம், ஜல் ஜீவன் திட்டம் போன்ற எல்லா திட்டங்களுக்கும் திருட்டு திமுக ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது.
இங்கே செயல்பாடும் அனைத்து நலத் திட்டங்களும் மக்கள் பணத்தில் தான் நிறைவேற்ற படுகிறது
இதில் இருவரும் ஸ்டிக்கர் ஒட்டுவது தவறு தான்
இதில் திமுக என்றால் ஆகாது
சிலருக்கு
ரீலு அருந்திருச்சு
மத்திய அரசின் திட்டத்திற்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டியதாக கூறப்படுகிறது ஏதேனும் சிலவற்றை கூற முடியுமா?
கோபாலு அவர்களே, மத்திய அரசின் திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி வைத்து அப்பாவிகளை ஏமாற்றியது தான் திருட்டு திராவிட கழிச்சடைகளின் சாதனை. உதாரணமா ரேஷன் கடை அரிசி, கோதுமை . கிராம சாலைகள் திட்டம், காலை உணவு திட்டம், இலவச வீடு கட்டும் திட்டம். இன்னும் பல. இதை விட கொடுமை, பழங்குடியினருக்கும் SCST பள்ளிகளுக்கு கொடுத்த நிதியை உபயோகிக்காமல் பிற திட்டங்களுக்கு மடை மாற்றம் செய்தது கொடுமை.
புளி சாருக்கு துப்பாக்கி சுடுவது திறமை இருந்து என்ன பயன் அவர்கள் கையில் வெறும் லாட்டி தானே இருக்கிறது துப்பாக்கியை உபயோகி அனுமதிப்பதில்லையே உயிருக்கு பாதுகாப்பு இல்லாத போதிலும் கூட துப்பாக்கி உபயோகிக்க தயங்குகின்றனர்.
உண்மையான கருத்துக்கு மட்மட்டுமே மதிப்பு இருக்கும், ஒருதலை பட்ச கருத்து, பொய்யான கருத்துக்களுக்கு மதிப்பு இருக்காது. நாம் எதை வேண்டுமானாலும் எழுதலாம், சொல்லலாம். மனச்சாட்சி படி உண்மையை மட்டுமே சொல்ல வேண்டும். விளம்பரத்துக்காக எதையும் சொல்லும் போக்கு ஆபத்தானது
அந்துமணியின் கருத்துக்கள் மற்றும் பதில்கள் அனைத்தும் கட்சி சாரா நடுநிலையோடு தான் இருக்கும் என்று என்னை போன்று தினமலர் தொடர் வாசகர்களுக்கு நன்றாகவே தெரியும்..... அவர் எந்த கூண்டுக்குள்ளும் (கட்சி) சிக்காத Free Bird.....!!!
படித்தவுடன் சிரித்து விடவும்
மற்றவர்களின் உழைப்பு, பெருமை, சாதனைகளில் சொந்தம் கொண்டாடும் திமுகவின் செயல்கள் அருவருப்பானவை ....
இதேபோல் தங்கள் கட்சியினரின் இடமும் விஜய் கூறவேண்டும். இல்லையெனில் இப்படியே பேசி அவரை கவிழ்த்து விடுவார்கள்.
தி.மு.க.வுக்கு நறுக்கென
குட்டு வைப்பது என்றால் அந்துமணிக்கு அலாதி பிரியம்
உண்மை திமுகவை திட்டி ஒரு பதிலாவது இல்லை என்றால் இவருக்கு தூக்கம் வராது
திராவிடத்தின் மாயை முற்றிலும் அகன்றுவிடவில்லை .... அதனால்தான் எதிர்கட்சியாகவாவது வர முடிந்தது .....
அந்துமணி யாரு?மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்