கிருஷ்ண ஜெயந்தி விழா : பொம்மைகள் விற்பனை 'ஜோர்'
விழுப்புரம்: விழுப்புரத்தில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பொம்மைகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதற்காக, விழுப்புரம் நகரில் வித விதமான பொம்மைகள் விற்பனை களைகட்டியது.
திரு.வி.க., வீதியில், கிருஷ்ணர் பொம்மைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன. வெண்மை, நீல நிறங்களில் கண்களை கவரும் வகையில், பல விதமான வகைகளில் கிருஷ்ணர் உருவ பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
இதில், சுடுகளிமண், பீங்கான், டெரகோட்டாவில் தயாரிக்கப்பட்ட கிருஷ்ணர் பொம்மைகள் இடம் பெற்றிருந்தன. இந்த பொம்மைகள் ரூ.50 முதல் ரூ.3000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சிறிய பொம்மைகள் முதல் 3 அடி வரை உயரமான பொம்மைகள் உள்ளன.
வழிபாட்டிற்காகவும், வீட்டை அலங்கரிக்கவும், இந்த பொம்மைகளை பொது மக்கள், சிறார்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்