தங்கம் விலை இன்றும் விர்ர்… 2 நாட்களில் சவரனுக்கு ரூ.3280 உயர்வு
சென்னை: சென்னையில் இன்று (செப் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், தமிழகத்தில் சில தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை, நேற்று அதிகரித்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (செப் 02) ஆபரண தங்கம் கிராம், 13,950 ரூபாய்க்கும், சவரன், 1,11,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (செப் 03), தங்கம் விலை கிராமுக்கு, 290 ரூபாய் உயர்ந்து, 14,240 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 2,320 ரூபாய் அதிகரித்து, 1,13,920 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ஐந்து ரூபாய் உயர்ந்து, 255 ரூபாய்க்கு விற்பனையானது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (செப் 04) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 960 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும், கிராமுக்கு 120 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 3280 ரூபாய் உயர்ந்துள்ளது. வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
அமெரிக்க டாலர் விலை சரிவு தங்கம் விலை உயர்வு
22k rate 14360rs not 14880மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்