சிவகங்கையில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து; டிரைவர் பலி
சிவகங்கை: சிவகங்கையில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பள்ளி வேன் டிரைவர் உயிரிழந்தார்.
சிவங்கை மாவட்டம் கோமாளி பட்டி அருகே லாரி மீது பள்ளி வேன் மோதி விபத்துக்கு உள்ளானது. இடையமேலூர் அருகே செயல்படும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில், கிருஷ்ணர் ஜெயந்தி அரசு விடுமுறை தினமான இன்று (செப் 04) சிறப்பு வகுப்புகளுக்கு குழந்தைகளுக்கு அழைத்து சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த, சிவகங்கையை சேர்ந்த பள்ளி வேன் டிரைவர் எத்திராஜ், 65, மருத்துவ மனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த மாணவ, மாணவியர்கள் பலர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவ மனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
களத்தில் தினமலர்!
சிவகங்கையில் பள்ளி வேன்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்கான காரணம் என்ன; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
லைவ் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்
Advertisement
Advertisement