லண்டனுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பயணத்துக்கு வரவேற்பு; பிரிட்டன் எம்பி மகிழ்ச்சி

1


லண்டன்: பிரிட்டன் கன்சர்வேட்டிவ் கட்சியின் எம்பியான பாப் பிளாக்மேன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் எதிர்காலச் சிந்தனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டதில் மகிழ்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு, மோகன் பாகவத் அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சர்வதேசப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் இறுதிக் கட்டமாக லண்டன் வந்தடைந்த மோகன் பாகவத்துக்கு, பிரிட்டன் பார்லிமென்ட் எம்பி பாப் பிளாக்மேன் மற்றும் 100க்கும் மேற்பட்ட பிரிட்டன் ஹிந்து அமைப்புகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த பிரிட்டன் பார்லிமென்ட் எம்பி பாப் பிளாக்மேன், ''ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் எதிர்காலம் குறித்து தெரிவித்த கருத்துக்களையும், யோசனைகளையும் கேட்டதில் மகிழ்ச்சி," என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி ஹிந்து கவுன்சில் யுகே, ஹிந்து போரம் ஆப் பிரிட்டன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உள்ளூர் ஹிந்து மற்றும் சமூக அமைப்புகள், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் ஆர்எஸ்எஸ்-ஸின் முயற்சிகளைப் பாராட்டி மோகன் பாகவத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

சில எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் டான் ஜார்விஸ், மோகன் பாகவத்தின் வருகை பிரிட்டனின் குடிவரவு விதிகளுக்கு உட்பட்டே அமைந்துள்ளது என்று பார்லிமென்டில் விளக்கம் அளித்து உள்ளார். பிரிட்டனில் நடைபெறும் இந்திய வம்சாவளியினர் கூட்டத்தில் பகவத் உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement