கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம்; போராடி வரும் தூய்மைப் பணியாளர்களிடம் அமைச்சர்கள் உறுதி
சென்னை: தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 15 நாட்களாக தூய்மை பணியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுடன் இன்று அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது: போராட்டம் என்று அழைத்தீர்கள், இது போராட்டம் அல்ல;
மாநாடு மாதிரி எவ்வளவு கூட்டம் இருக்கிறது. ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கிறேன். அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் உங்களது சகோதரர்களாக தான் நிற்கிறோம்; அமைச்சர் என்பது எல்லாம் இரண்டாவது தான். உங்கள் வீட்டு பிள்ளைகளாக தான் நிற்கிறோம்.
16 நாட்களாக பொது அமைதி, போக்குவரத்துக்கு எந்த தொந்தரவும் வராமல் ராணுவ கட்டுப்பாட்டு உடன் போராட்டம் நடத்திய உங்களை அனைவரையும் நாங்கள் தலை வணங்குகிறோம். கஜானவே இல்லாமல், காணாம போய்விட்டது. மனிதாபிமானம், கருணை, மனசாட்சி காணாமல் போகவில்லை.
தமிழக முதல்வர் விஜயின் மனதுக்குள் உங்கள் மீதான அன்பும், அக்கறையும் அப்படியே இருக்கிறது. இனி செயலில் காட்டுவோம். நாங்கள் வார்த்தைக்கு சொல்லவில்லை; உங்கள் வீட்டு பிள்ளைகளாக நாங்கள், உங்களுக்கு வேலை செய்ய தான் வந்து இருக்கிறோம். போராடுவது உங்கள் உரிமை; அதை நிறைவேற்றி தருவது எங்கள் கடமை.
கஜானால ஒன்னும் இல்ல!
அமைச்சர் ஆனந்த் பேசியதாவது: போராட்டம் நடத்தினால் கடந்த ஆட்சிகளில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்; ஆனால் முதல்வர் விஜய் அப்படி இல்லை. சென்ற ஆட்சி காத்தில் இருந்தவர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு போய்விட்டார்கள்; கஜானால ஒன்னும் இல்ல, இருந்திருந்தா செஞ்சிருப்போம்.
நாங்கள அதை சரி செய்து ஒரு ரூபாய் கூட வரி பணத்தை சொந்த பயன்பாட்டுக்கு பயன்படுத்தாமல் உங்களுக்கு தேவையான கோரிக்கைகளை முதல்வர் விஜய்யின் உத்தரவின் பேரில் நிற வேற்றி தருவோம். எதையெல்லாம் உடனடியாக செய்து தர முடியுமோ அதை உங்களோடு ஆலோசித்து செய்து தருவோம். இவ்வாறு அமைச்சர் ஆனந்த் பேசினார்.
தீர்வு காண…
அமைச்சர் ஆதவ் பேசுகையில், ''பிரச்னைக்கு ஆதரவு தெரிவிக்க வரவில்லை, தீர்வு காண வந்துள்ளோம்; செய்து கொடுக்க வேண்டிய இடத்தில் நாங்கள் இருந்தாலும் நிர்வாக ரீதியாக பல சிக்கல்கள் இருக்கிறது. உங்களோடு நாங்கள் இருக்கிறோம்'' என்றார்.
@block_P@
அமைச்சர் நிர்மல் குமார் பேசியதாவது: இது உங்கள் அரசு, உங்கள் அண்ணன் ஆட்சி செய்கிறார், உங்களுக்கு செய்யாமல் வேறு யாருக்கு செய்ய போகிறார். உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை உரிய நேரத்தில் முதல்வர் விஜய் நிச்சயம் மேற்கொள்வார், என்றார்.block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
சென்னையில் தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர்கள் நேரில் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலின் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
விதி 110நின் கீழ் ஒரு promise கொடுக்க வேண்டியதுதனே. இனி கஜானா காலியாகாத்தான் இருக்கும். முதலில் தலைமை செயலகம், MLA களுக்கு கார் வழங்கும் வேலையை பாருங்கள். இவர்களை பின்னர் பார்க்கலாம்.
அரசாங்கம் யோசித்து செயல் பட வேண்டும். இவர்கள் நியமனம் முதல்,, நிறுவன பொறுப்பு முதல் ஆய்வு செய்ய வேண்டும்.
தமிழக சட்டபேரவையில் 110வது விதியின் கீழ் பல்வேறு சலுகைகளை கடந்த சில தினங்களாக முதல்வர் அறிவித்து வருகிறார். அவரது அமைச்சர்களும் கூட தங்கள் பங்கிற்காக மக்களை கவரும் பல திட்டங்களை தங்களது துறை சம்பந்தபட்ட விவாதத்தின் போது சலுகை என்ற பெயரில் அறிவித்து வருகிறார்கள். இவை அனைத்தையும் கணக்கிட்டால் பாதி பட்ஜெட் தொகைக்கு ஈடான நிதி தேவைப்படும். .தவெக ஆட்சி ஐந்தாண்டு தொடருமா என்பதே சந்தேகமாக இருக்கின்ற நிலையிலும் ஆட்சி பதவியேற்று நான்கு மாதம் கூட முடிவதற்குள் 1200 கோடி ரூபாயில் புது சட்டமன்ற கட்டிடம் என்ற அறிவிப்பும் வேறு இந்த செலவினங்களில் அடக்கம். (850 உறுப்பினர்கள் அமரக்கூடிய புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கே 971 கோடி தான் செலவாகியது என்பது நமக்கு நன்கு தெரியும்) இந்த நிலையில் தூய்மை பணியாளர்களை இன்று சந்தித்த மூன்று அமைச்சர்கள் திமுக கஜானாவை காலி செய்து சென்று விட்டதாக மீண்டும் தெரிவித்தது வேடிக்கையாக இருக்கிறது. இதிலிருந்து மூவருமே நிதி விஷயத்தில் தவறான தகவலை தான் தருகிறார்கள் என்பது தெளிவு. கஜானா காலி என்றால் புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களுக்கு நிதி ஆதாரம் எங்கே? எல்லாவற்றிற்கும் போதுமான நிதி அரசிடம் இருந்தால் கஜானா காலி என மீண்டும் மீண்டும் மக்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் என்ன? நியாயமான கோரிக்கைக்கு தூய்மை பணியாளர்களை போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன ? இலவசங்களிலும் சலுகைகளிலும் மக்களை ஏமாற்றி முடியாது என்பதை திமுக தேர்தலில் சந்தித்த தோல்வியையே ஒரே பாடமாக தவெக எடுத்து செயல்படா விட்டால் வரும் இடைத் தேர்தல்களில் எதிலுமே அந்த கட்சி வெற்றி பெறுவது மிகவும் கடினம்.
அருமையான பேச்சு ஆறுதலான பேச்சு . செயலில் காட்டினால் மிக்க நன்று . எல்லா பிரச்சனைகளையும் தீர்க்க முயல்வதே மிக முக்கியமான மாற்றம். மக்களும் அரசு ஊழியர்களும் பொறுப்புடன் நடக்க வேண்டும் . எல்லாத்துக்கும் இலவசம் , லஞ்சம் என்று போய் இந்த அரசாங்கத்தின் நோக்கத்தை குலைக்க வேண்டாம்
வெக்கமே இல்ல,
அதனால கஜானால பணமே இல்லனு சொல்லுவோம்
பரந்தூர் ஏர்போர்ட் காலிபண்ணி 2000கோடி நஷ்டம் பண்ணுவோம் ஆனா இல்லனு உருட்டுவோம்
புதிய தலைமைசெயலகம் 2000 கோடில கட்டுவோம் ஆனா பணம் இல்லனு உருட்டுவோம்
புதிய கார் ரேசிங் டிராக் 2000 கோடியில கட்டுவோம் ஆனா பணம் இல்லனு உருட்டுவோம்மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்