நவம்பர் 10ல் வெளியாகிறது சோனியாவின் சுயசரிதை புத்தகம்; ஒப்புக்கொண்டது அமெரிக்க நிறுவனம்
புதுடில்லி: பெங்குயின் இந்தியா நிறுவனம் பின்வாங்கியதைத் தொடர்ந்து, சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை, வரும் நவம்பர் 10ல் அமெரிக்காவின் ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சோனியா, 79, தன் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதியுள்ளார். 'பிலாங்கிங்: எ ஜர்னி ஆப் லவ்' என்ற பெயரில் 544 பக்கத்திற்கு தயாராகும் புத்தகத்தை சர்வதேச அளவில், 'பென்குயின் ரேண்டம் ஹவுஸ்' நிறுவனத்தின் ஒரு பிரிவான 'ஆல்பிரட் ஏ நாப்' வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து திடீரென , 'சோனியாவின் புத்தகத்தை வெளியிட நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், இந்தியாவில் அந்த புத்தகத்தை நாங்கள் வெளியிடவில்லை' என, 'பென்குயின் இந்தியா' நிறுவனம் அறிவித்துவிட்டது. புத்தகத்தில் சில மாற்றங்களைச் செய்து, சில பகுதிகளை நீக்குமாறு பதிப்பகம் சார்பில் வைத்த கோரிக்கையை சோனியா ஏற்க மறுத்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்த புத்தகத்தை நவம்பர் 10ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்த பதிவில் கூறியிருப்பதாவது: சோனியா எழுதிய 'பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்' என்ற நூலை ஹார்பர் காலின்ஸ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட உள்ளது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சுயசரிதை புத்தகம், வரும் நவம்பர் 10ம் தேதி இந்தியாவில் வெளியிடுவோம் என தெரிவித்துள்ளது.
ஈ வெல்லத்து மேல இல்லாட்டி P மேல உக்காரும்
மனைவி.
ஒட்டு திருட்டு, கிளப் டான்ஸ் ராஜிவ் கொலை போர்ப்பஸ் பீரங்கி வழக்கு தடுக்க முயற்சி மற்றும் சீனா வுக்கும் கான்கிறாஸ் திருட்டு ஒப்பந்தம் எல்லாம் இடம் பேருமா.
This book is reportedly written by a ghost writer. This lady does not have such a command over English Language, which is not her mother tongue.
எவ்வளவு பொய்கள், முரண்பாடுகள் என்று பட்டியலிட ஏஐ தொழில்நுட்பம் காத்துக்கொண்டு இருக்கிறது..
சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை, வரும் நவம்பர் 10ல் அமெரிக்காவின் ஹார்பர் காலின்ஸ் பதிப்பக நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்துள்ளது. உலகிலே யாருமே முன்வராத சமயத்தில் தானாக இந்த அமெரிக்க பதிப்பகம் டிரம்பைப்போன்று, சோனியாவின் சுயசரிதை புத்தகத்தை வெளியிட முன் வந்துள்ளது இதன் தாக்கம் என்னவாக இருக்கும் இந்தியாவில் ஏதாவது கிளர்ச்சி அல்லது அமைதி இன்மை இவைகளை உருவாக்கவே அமெரிக்க அதிபர் துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார் அவருக்கு இது கையில் கிடைத்த லட்டு போலாகிவிட்டது இதனால் அவர் நல்ல பெயர் வாங்கிக்கொண்டு பிரதமர் மோடிக்கு எதிராக பப்புவை தூண்டிவிடுவார் இதுதான் காரணம் ஆனால் இந்த புத்தகம் வெளிச்சந்தையில் விற்காமலே இருக்கும்
மயில் வாகனா உங்க தலவி படிக்கறதுக்காக வேலை செஞ்சாங்களா இல்ல பிழைப்புக்காக வேல் செஞ்சாங்களா . கேட்டு சொல்லேன். அங்க இருந்திருந்தா ப்ரதமர் ஆயிருப்பாரா? எல்லாம் எங்க தலையெழுத்து
ஊழல் செய்பவர்களுக்கும், நாட்டை சீரழிப்பவர்களுக்கும் மட்டும்தான் உதவும்... உண்மையான சுயசரிதமாக இருந்தால்.... இல்லை கருணாநிதி மாதிரி தன்னை தானே புகழ்ந்து கொண்டு, உயர்வாக கற்பனையாக கதை எழுதி இருந்தால் பழைய பேப்பர் கடைக்காரர் கூட வாங்கமாட்டார்..
பெரிய சுதந்திர போராட்ட தியாகி ... வாழக்கை வரலாறை எல்லாம் நாம தெரிஞ்சுக்கணும்..எல்லாம் தலையெழுத்து.
certainly political temperature is going to raise here.
nonsense..no one knows this lady...how it will affect political temperature..மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்