கழிவு நீர் கால்வாயை மூடாததால் பாதையின்றி மக்கள் தவிப்பு

மானாமதுரை, செப்.5-

மானாமதுரையில் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாயை மூடாமல் விடப்பட்டதால் அப்பகுதி மக்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.

மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பெரும்பாலான தெருக்களில் குடிநீர் குழாய் பதிப்பதற்காகவும், சேதமடைந்த பேவர் பிளாக் கற்களை மாற்றுவதற்காக ரோடுகள் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் தோண்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலான தெருக்களில் பணிகள் முடிவு பெற்ற நிலையில் ஸ்டேட் வங்கி அருகே உள்ள தெற்கு வெள்ளாளர் தெரு முகப்பில் உள்ள கழிவுநீர் கால்வாய் கடந்த 8 நாட்களுக்கு முன்பு தோண்டப்பட்ட நிலையில் அதனை மூடாமல் அப்படியே விட்டு சென்றதால்அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியே செல்ல முடியாத நிலையில் அவதிப்பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள் கூறியதாவது:

தெற்கு வெள்ளாளர் தெரு வழியாக மறவர் தெரு, ஆற்றுக்கு செல்லும் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்தவர்கள் இந்த வழியாகத்தான் நகருக்குள் சென்று வருகின்றனர். கழிவுநீர் கால்வாய் மற்றும் பேவர் பிளாக் கற்களை மராமத்திற்காக தோண்டப்பட்ட நிலையில் அதனை சரி செய்யாமல் அப்படியே விட்டுள்ளனர்.உடல்நலம் சரியில்லாதவர்களை ஆட்டோவில் கூட மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது என்றனர்.

Advertisement