விளக்கு இல்லாத மின் கம்பங்கள் இரவில் வாகன ஓட்டிகள் சிரமம்
திருவள்ளூர், செப். 5–
திருவள்ளூர் – மணவாள நகரை இணைக்கும் வகையில், கூவம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம், விளக்குகள் இல்லாத மின் கம்பங்களால் இருளில் மிதக்கிறது.
சென்னை, பூந்தமல்லி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து, அனைத்து வாகனங்களும் மணவாள நகர் வழியாக திருவள்ளூர் வருகின்றன.
இதற்காக, திருவள்ளூரை இணைக்கும் வகையில், மணவாள நகர் – பெரியகுப்பம் கூவம் ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு உள்ளது.
இந்த மேம்பாலத்தின் மையத்தில், நகராட்சி சார்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பல மின் கம்பங்கள், விளக்குகள் இல்லாமல் காணப்படுகின்றன. இதன் காரணமாக, மேம்பால சாலை இருளில் மிதப்பதால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, நகராட்சி நிர்வாகத்தினர், மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களில், மின் விளக்குகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்