மழைநீர் வடிகாலில் செடிகள் தண்ணீர் செல்வதில் சிக்கல்

காஞ்சிபுரம்: நத்தப்பேட்டையில் செடிகள் வளர்ந்து, துார்ந்த மழைநீர் வடிகாலால், மழைக்காலத்தில் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தப்பேட்டை பகுதியில் மழைநீர் வடிகாலை முறையாக பராமரிக்காதாதால், ஆதிதிராவிடர் நல அரசு துவக்கப்பள்ளி ஒட்டியுள்ள பகுதியில், செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ளது.

இதனால், பருவமழையின்போது கால்வாய் மூலம் வெளியேற வேண்டிய மழைநீர், அப்பகுதில் உள்ள குடியிருப்புகளை சூழும் அபாயம் உள்ளது.

எனவே, வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன், நத்தப்பேட்டையில் செடிகள் வளர்ந்து துார்ந்த நிலையில் உள்ள மழைநீர் வடிகாலை துார்வாரி, சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement