சர்வதீர்த்த சின்னகுளம் படுமோசம் துார்வாரி சீரமைக்க வலியுறுத்தல்
காஞ்சிபுரம்: செடி, கொடிகள் வளர்ந்து, துார்ந்த நிலையில் உள்ள காஞ்சிபுரம் சர்வதீர்த்த சின்ன குளத்தை துார்வாரி சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், ஒலிமுஹமதுபேட்டை சுற்றுவட்டார பகுதியில் பெய்யும் மழைநீர், சர்வதீர்த்த குளத்திற்கு கழிவுகளுடன் நேரடியாக செல்வதற்கு முன், மழைநீரில் அடித்து வரப்படும் குப்பை கழிவுகளை வடிகட்டிய பின், சர்வதீர்த்த குளத்திற்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்குளத்தை முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்து, குப்பை கழிவுகள் குவிந்துள்ளதுள்ளன. இதனால், இக்குளத்திற்கு மழைநீர் வருவதிலும், மழைநீரை வடிகட்டுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, சர்வதீர்த்தகுளத்திற்கு மழைநீரை வடிகட்டி அனுப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள சர்வதீர்த்த சின்ன குளத்தை துார்வார, ஹிந்து சமய அறநிலைய துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும்
-
தங்கம் வெல்ல ஷீத்தல் தேவி 'ரெடி': உலக 'பாரா' வில்வித்தை ஆரம்பரம்
-
'கன்டெய்னர்' பயிற்சியில் இந்திய நட்சத்திரங்கள்: ஆசிய விளையாட்டுக்கு தயாராக...
-
செஸ்: 4 வயதில் சாதித்த எலெனா
-
ஆறாவது கோப்பை நோக்கி இந்தியா: ஆசிய ஜூனியர் ஹாக்கியில்
-
டேபிள் டென்னிஸ்: சிண்ட்ரெல்லா அபாரம்
-
இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: பெண்கள் ஆசிய கோப்பையில் மோதல்