அகழாய்வு பணிகள் மாணவிகள் ஆய்வு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே அகழாய்வினை சென்னை எத்திராஜ் கல்லுாரி மாணவிகள் பார்வையிட்டனர். கண்டாச்சிபுரம் தாலுகா ஆதிச்சனுார் பகுதியில் தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், கடந்த மார்ச் மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
இதனை சென்னை எத்திராஜ் கல்லுாரி மாணவிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அந்த கல்லுாரியின் வரலாறு மற்றும் சுற்றுலாத்துறை தலைவர் வசந்தி தலைமையில் மாணவிகள் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இதில் ஆதிச்சனுார் அகழாய்வு திட்ட இயக்குனர் லோகநாதன், அப்பகுதியில் மேற்கொள்ளப்படும், ஆய்வுப்பணிகள் குறித்து மாணவிகளுக்கு விளக்கினார்.
குறிப்பாக இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள, 8 கல்வட்டங்கள் மற்றும் ஈமப்பேழை, எலும்புகள், சங்குவரிசைகள் ஆகியவற்றையும் அதனுடைய காலங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். இதில், 20க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் இதில் பங்கேற்றனர். இணை இயக்குனர்கள் பரத்குமார் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொல்லியல் துறை ஊழியர்கள் செய்தனர்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி