மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் கல்லுாரியில் பன்னாட்டு கருத்தரங்கம்

மயிலம்: மயிலம் அருகே நடந்த பன்னாட்டு கருத்தரங்கில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மயிலம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை அறிவியல் கல்லுாரியில், சிவப்பிரகாசர் அரங்கில் வணிகவியல் துறை சார்பில், பன்னாட்டு கருத்தரங்கம் நடந்தது.

மயிலம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கி ஆசியுரை வழங்கினார். கல்லுாரி செயலாளர் ராஜீவ் குமார் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

வணிகவியல் துறை தலைவர் அருணகிரி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு துவக்க உரையாற்றினார்.

 ‘உலகளாவிய பொருளாதார கண்டுபிடிப்பு மற்றும் நிலைத்தன்மையின் எதிர்காலம்’ எனும் தலைப்பில் எத்தியோப்பியா நாட்டின், ஹிமாலயா பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் தமிழரசன்  சிறப்புரையாற்றினார். 

புதுச்சேரி பல்கலைக்கழக வணிகவியல் துறை தலைவர் அருள்முருகன், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வணிகவியல் துறை பேராசிரியர் சுந்தர், கேரள மாநிலம் மகாத்மா காந்தி பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜெயசாகர் ஆடிசி ஆகியோர் ஆய்வரங்கில் கருத்துரைகளை வழங்கினர்.

கல்லுாரி உதவி பேராசிரியர்கள் சுதா, அமுதவள்ளி, அன்பழகன், ஞானசேகர், ராம்குமார், ஹரிஷ் பாபு,  பாபு, ராஜா ஆகியோர் கொண்ட குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து ‘உலகளவிய பொருளாதாரத்தில் கண்டுபிடிப்பு மற்றும் நிலைத்தன்மை’ என்ற நுாலை, மயிலம் கல்லுாரி செயலாளர் ராஜூவ்குமார் ராஜேந்திரன் வெளியிட்டார்.

முதல் பிரதியை எத்தியோப்பியா பல்கலைக்கழக பேராசிரியர் தமிழரசன் பெற்றுக் கொண்டார். இதில் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கல்லுாரிகளில் இருந்து வணிகவியல் துறை மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

இதில் உதவி பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிறைவில் உதவி பேராசிரியர்  அமுதவள்ளி நன்றி கூறினார்.  

Advertisement