அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியது; இருவர் உயிரிழப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோ நகருக்கு அருகில் சியரா ஸ்கை பார்க் விமான நிலையம் அருகே சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை. விபத்து நடந்த பகுதியில், சிறிது நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது, பின்னர் சரி செய்யப்பட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
வாசகர் கருத்து (1)
Barathi - ,
06 செப்,2026 - 10:57 Report Abuse
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விழுந்து ரெண்டு பேர். 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement