பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உறியடி உற்சவம் நடந்தது.
கிருஷ்ணஜெயந்தியையொட்டி, நேற்று முன்தினம் கிருஷ்ணர் சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் மாலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, நேற்று மதியம் கோவில் முன் உறியடி உற்சவம் நடந்தது. அதேபோல், ராதா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணன் கோவிலிலும் உறியடி நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, மந்தைவெளியில் வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement