15,521 தெருநாய்களுக்கு  ரேபிஸ் நோய் தடுப்பூசி

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்களால் ‘ரேபிஸ்’ நோய் பரவுவதை தடுக்கும் வகையில், ஜூலை 18 முதல் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று 31வது வார்டில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் பார்வையிட்டனர். 4 வாகனங்களில் 7 கால்நடை டாக்டர்கள், 28 நாய்பிடி வீரர்கள் உட்பட கால்நடை பராமரிப்பு துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், விலங்கின ஆர்வலர்கள் உதவியுடன் 941 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இம்முகாம் வாயிலாக இதுவரை 12,214 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நுாறு வார்டுகளில் மொத்தம் 38,348 தெருநாய்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. இந்தாண்டில் இதுவரை 15,521 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய மாநகராட்சி சார்பில் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தடுப்பூசி போடப்பட்ட நாய்களின் புகைப்படங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. மீதமுள்ள வார்டுகளிலும் தடுப்பூசி, கருத்தடை பணிகள் தொடரும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement