ஆக்கிரமிப்புகளை அகற்ற  கமிஷனர் உத்தரவு

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, ஆக்கிரமிப்பு கடைகளை கண்காணித்து அகற்ற மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார் உத்தரவிட்டார். 

மாசி வீதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை நேற்று பார்வையிட்டார். பக்தர்கள் சிரமமின்றி தரிசிக்க ஏதுவாக, கோயிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். கழிப்பறைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கிரிவல பாதைகளை சீரமைப்பதுடன், நிரம்பிய குப்பை தொட்டிகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். தெருவிளக்கு பழுதுகளை உடனே சரிசெய்ய வேண்டும். ஆங்காங்கே துாய்மை குறித்த விழிப்புணர்வு பதாகைகள் வைக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உதவி கமிஷனர் குமரன், நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, நகர திட்டமிடுநர் முரளி, உதவி செயற்பொறியாளர் காமராஜ் உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement