கோயிலில் கிருஷ்ண யாகம்

பரமக்குடி:பரமக்குடி வேதாத்யயான சபையின் சார்பில், சுந்தரராஜ பெருமாள் கோயிலில் 72 ஆவது ஆண்டு கிருஷ்ணய யாகம் நடந்தது.

கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி வேதாத்யயன சபையினர் யாகத்தை நடத்தி வருகின்றனர். செப்., 3 துவங்கிய விழாவில் யாக கர்த்தாவாக ராமச்சந்திரன் இருந்தார்.

சபையின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஐயங்கார் வரவேற்றார். உலக நன்மைக்காக 3 நாட்கள் ஹோமம், வேதம், கீதா பிரபந்தம், பாராயணங்கள் நடந்தது. சலச தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. சபை ஆசிரியர் யோகநாதன் ஐயங்கார், செயலாளர் சுப்புராமன் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

Advertisement