மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம் ஓய்வு பெற்றோர் தீர்மானம்

மேலுார்: மேலுாரில் அனைத்து துறை ஓய்வூதிய நலச் சங்க ஆண்டு விழா மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பணபலன், கட்டணமில்லா சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சிக்கு தலைவர் ஜெயராஜ் தலைமை வகித்தார். வன அலுவலர் சுந்தரகுமார் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் தமிழையா, அப்துல் ரகுமான் நிதிநிலை அறிக்கை வாசித்தனர். ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் சார்ஜன் சாலமோன் ராஜா, கிளை மேலாளர் கார்த்தியாயினி, மூத்த குடிமக்கள் வங்கியில் சேமிப்பது, டாக்டர் சையது முபாரக் உணவு முறைகள், நீதித்துறை பணி நிறைவுற்றோர் சங்க மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் பாஸ்கரன் புதிய மருத்துவ காப்பீடு திட்டம் குறித்து பேசினர்.

வாழும் கலை அமைப்பின் சர்வதேச பயிற்சி ஆசிரியர் சங்கர பாண்டியன் பயிற்சி அளித்தார். 70 வயது நிரம்பியவர்களுக்கு 10, 75 வயது நிரம்பியதற்கு 15, 80 வயது துவங்கியவர்களுக்கு 20 சதவீதம் கூடுதல் பண பலன், அனைத்து மருத்துவமனைகளிலும் கட்டணமில்லா சிகிச்சை, அரசு பஸ்சில் மூத்த குடிமக்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ந முல்லை பெரியாறு ஒருபோக பாசன சங்கத் தலைவர் முருகன், டாக்டர் பூபதி, நகராட்சி தலைவர் முகமது யாசின் பங்கேற்றனர். சங்க ஆலோசகர் பாண்டி நன்றி கூறினார்.

Advertisement