பெண்ணை தாக்கியவர் கைது

வானுார்: ஆரோவில் அருகே டீ கடையில் குறைந்த விலைக்கு சமோசா தர மறுத்த பெண்ணை தாக்கி, கடையை சேதப்படுத்திய  நபரை போலீசார் கைது செய்தனர்.

மயிலம் அடுத்த ஆலகிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் மனைவி சரிதா, 33; இவர் குயிலாப்பாளையம் – ஆரோவில் செல்லும் சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடைக்குச் சென்ற குயிலாப்பாளையம் கிராமத்தை சேர்ந்த வாழுமுனி, 36; அங்கு வேலை செய்யும் சரிதாவிடம் சமோசாவை குறைந்த விலைக்கு தரும்படி கேட்டுள்ளார்.

அவர் தர மறுத்ததால் அந்த பெண்ணிடம் வாழுமுனி வாக்குவாதத்தில் ஈடபட்டு அந்த பெண்ணைத் தாக்கி, கடையில் இருந்த பொருட்களை கீழே தள்ளி சேதப்படுத்தினார்.

இது குறித்து அனிதா அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, வாழுமுனியை கைது செய்தனர்.

Advertisement