தி.மு.க., செயற்குழு ஆலோசனை கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மேற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மலையரசன் எம்.பி., முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அரசு, சங்கர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், தி.மு.க.,வில் 16வது அமைப்பு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சில தினங்களுக்கு முன் 9 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை குறித்து விளக்கி, கட்சியில் மேற்கொள்ளப்பட உள்ள நிர்வாக சீரமைப்பு, முப்பெரும் விழா நடத்துதல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து கலந்துரையாடினர்.
கூட்டத்தில், நகர செயலாளர்கள் சுப்ராயலு, ஜெய்கணேஷ், மாவட்ட துணைச் செயலாளர்கள் அண்ணாதுரை, காமராஜ், நிர்வாகி பாபு, பொதுக்குழு உறுப்பினர்கள் மணிமாறன், ராஜி, ஒன்றிய செயலாளர்கள் சத்தியமூர்த்தி, நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பெருமாள், துரைமுருகன், பாரதிதாசன், அய்யனார், ராஜேந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அசோக்குமார்.
ஒன்றிய சேர்மன்கள் தாமோதரன், வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், இளைஞரணி நிர்வாகி உதயா, பேரூராட்சி சேர்மன் வீராசாமி, துணைச் சேர்மன் சங்கர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைச் செயலாளர் புவனேஸ்வரி பெருமாள் நன்றி கூறினார்.