நடுவீரப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மதிந்தன

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு நிலவியது.

நடுவீரப்பட்டில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது. இந்த ஏரியில், தண்ணீர் வற்றிய நிலையில் ஒரு இடத்தில் மட்டும் எப்போதும் தண்ணீர் குட்டையாக தேங்கி நிற்கும்.

இந்த ஏரியில் மழைக்காலத்தில் பல பகுதியிலிருந்து வந்த மழைநீரில் அடித்து வரப்படும் மீன்கள் குட்டையில் தங்கிவிடும். தானாக வளரும் இந்த மீன்களை அப்பகுதி சிறுவர்கள், பொதுமக்கள் பிடித்துச் செல்வர்.

இந்நிலையில், நேற்று காலை ஏரி குட்டையில் இருந்த நுாற்றுக் கணக்கான மீன்கள் செத்து மிதந்தன.

தகவலறிந்த கடலுார் பி.டி.ஓ.,க்கள் ராமச்சந்திரன், பார்த்திபன் நேரில் வந்து ஏரியை ஆய்வு செய்தனர். மேலும், இறந்த மீன்களை அப்பறப்படுத்தவும், தண்ணீரை கால்நடைகள் குடிக்காமல் பார்த்துக் கொள்ளவும்,பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட பேனர் வைக்கவும் ஊராட்சி செயலாளருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார அலுவலர்கள் ஏரி தண்ணீரின் தன்மையை அறிய பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.

Advertisement