ரயில்வே கேட்டில் வேன் மோதல் 15 நிமிடம் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம்
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில், ரயில்வே கேட்டில் சரக்கு மினி வேன் மோதியதில் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக சென்றது.
நெல்லிக்குப்பம் ஆலை ரோட்டில் உள்ள ரயில்வே கேட்டில் நேற்று காலை 11:30 மணிக்கு சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் வந்ததால் கேட் மூடப்பட்டது.
கேட்டை மூடும் போது வேகமாக வந்த மினி சரக்கு வேன், கேட் மீது மோதியது. இதில் ஒரு பக்கம் ரயில்வே கேட் உடைந்தது. இதனால் ரயில் செல்ல சிக்னல் கிடைக்காததால் நடுவழியில் ரயில் நின்றது.
அதன்பிறகு ரயில்வே கேட்டுக்கு பதிலாக சங்கிலி கட்டிய பிறகு சிக்னல் கிடைத்து ரயில் 11:45 மணிக்கு 15 நிமிடம் தாமதமாக சென்றது.
இந்த சம்பவத்தால் ஆலைரோடு மற்றும் சரவணபுரம் ரயில்வே கேட்டுகளில் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
-
சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
Advertisement
Advertisement