பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி: 3 பேர் படுகாயம்

பெண்ணாடம்: பெண்ணாடம் அருகே மின்னல் தாக்கி விவசாயி இறந்தார். 3 பேர் படுகாயமடைந்தனர்.

பெண்ணாடம் அடுத்த நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்தவர் அழகானந்தம், 47; விவசாயி. இவர், நேற்று மாலை 5:00 மணியளவில் அதே பகுதியில் உள்ள தனது வயலுக்கு சென்றார்.

அப்போது அப்பகுதியில் மின்னல், இடியுடன் பலத்த மழை பெய்தது. இதில், மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே அழகானந்தம் இறந்தார்.

இதேபோன்று, வயலுக்குச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் சத்தியராஜ், 35; செல்லதுரை மகன் ராம்குமார், 26; தீவளூர் பழனிமுத்து, 70; ஆகிய 3 பேரும் காயமடைந்து மயங்கி விழுந்தனர். காயமடைந்த 3 பேரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement