காங்கயம் ரோட்டில் ஆக்கிரமிப்பு அகற்றம்

திருப்பூர், செப். 6–

திருப்பூர் காங்கயம் ரோட்டில் ஏற்கனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் முளைத்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

சி.டி.சி., கார்னர் முதல் நல்லுார் வரையிலான பகுதியில் நடைபாதைகளை ஆக்கிரமித்தும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் கடைகள் முன்பு அமைக்கப்பட்டிருந்த தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் ஏற்கனவே அகற்றப்பட்டன.



இந்நிலையில், சிலர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ததால், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று மீண்டும் ஆய்வு நடத்தி அவற்றை அகற்றினர். மீண்டும் ஆக்கிரமிப்பில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement