‘விவசாயிகள் மீது அக்கறை காட்டுங்க’
பல்லடம், செப். 6–
‘‘வெங்காயத்தின் மீது காட்டும் அக்கறையை, அதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் மீதும் தமிழக அரசு காட்ட வேண்டும்’’ என, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அதன் ஊடகப் பிரிவு மாநில செயலாளர் ஈஸ்வரன் கூறியதாவது:
ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் சின்ன வெங்காயம் விற்பனை செய்யும் அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேவேளையில், தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். தக்காளியை கட்டுப்படியான விலைக்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும். மேலும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பாமாயிலுக்கு பதிலாக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டில்லி மெட்ரோவில் பயணம்; பிரதமர் மோடி பகிர்ந்த வீடியோ வைரல்
-
சென்னையில் அதிமுக மா.செ.,க்கள் கூட்டம்; இபிஎஸ் தலைமையில் முக்கிய ஆலோசனை
-
இன்றைய நிகழ்ச்சி
-
தீபாவளி முன்பதிவு ரயில் டிக்கெட் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன; சர்வர் முடங்கியதால் பயணிகள் அவதி
-
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
-
வடகிழக்கு மாநிலங்களுக்கு 4 நாட்கள் பயணம்; அசாமில் துணை ஜனாதிபதி சிபிஆர்!
Advertisement
Advertisement