மக்கள் நலன் சார்ந்த கொள்கையால் இந்தியா வேகமாக முன்னேறுகிறது; பிரதமர் மோடி
புதுடில்லி: 'மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையினால், இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது,' என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டில்லியில் மிகவும் பிரபலமான ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழா, ஆசிரியர் தினமான இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்றார். இதற்காக, அவர் மெட்ரோ ரயிலில் பயணித்துச் சென்றார். அப்போது, ரயிலில் பயணித்த மாணவர்கள், குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, பல்கலையின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது; மேற்கு ஆசியாவில் போர் மற்றும் பல்வேறு வர்த்தக சவால்கள் நிலவும் காலகட்டத்திலும் கூட, இந்தியாவின் காலாண்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. உலகளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளதை, ஜப்பானின் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியும் உயர்த்தியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையுடன் இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.
1925ல் முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டதிலிருந்து 2014 வரை, சுமார் 90 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான ரயில் பாதைகளே மின்மயமாக்கப்பட்டிந்தனர். ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாதத்தைப் பரப்புகிறவர்கள் தற்போது பின்தங்கியுள்ளனர். பாகிஸ்தான் எதாவது தவறு செய்தால், இந்திய ராணுவம் அவர்களின் எல்லைக்குள் நுழைந்து தாக்குவார்கள். ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு வரையிலும் தற்போது அமைதி அதிகரித்து வருகிறது. மவோயிஸ்ட்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டு விட்டனர். இந்தியாவின் கொள்கை குறித்து ஒரு காலத்தில் கவலை தெரிவித்த உலக நாடுகள், தற்போது, இந்தியாவின் கொள்கை ரீதியிலான செயல்பாடுகள் பற்றி பேசுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
எனக்கே வேலை,
நமது இப்போதைய மோடியின் மத்திய அரசு நம் கண் கூடாக பல நலத்திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டு இருக்கின்றது.
திரைமறைவாக இந்தியாவின் நீண்ட கால அடிப்படையில் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு செயல் படுத்தப்பட்டு வருகிறது.
வாழ்த்துகள். ஆனால் திராவிஷ ரவுடிகளின் சொத்துக் குவிப்பு வழக்குகளில் எந்த முன்னேற்றமும் இல்லாதது போல் தோன்றுகின்றது.
What our beloved PM says is true to every letter. Our enemies from within our Nation damage our own people and our Nation.
கண்டிப்பாக வளர்ச்சி தான்.இதற்காக மோதிஜி யை இந்திய மக்கள் வாழ்த்துகிறோம். காங்கிரஸ் ஆக இருந்திருந்தால் சில சமயம் இந்தியா முஸ்லிம் நாடாக மாறியிருக்கும்
முக்கியமாக பிரதமரின் நதி நீர் இணைப்பு திட்டத்தினால் பல ஆயிரம் மக்கள் காப்பாற்றப்பட்டார்கல் , அசாம், பிஹார், போன்ற மாநிலங்களில் வெள்ளம், மழை போன்ற நிகழ்வுகள் ஏதும் இல்லை, தவிர, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூடுதலாக நீர் பெற்று பல ஆயிரம் ஏக்கர் புதிதாக பாசன வசதி பெற்றன. ஆனால் தனி மனித வருமானத்தில் உலக அளவில் 149 வது இடத்தில் இருக்கிறோம். பெருமைதானே
நதிநீர் இணைப்பு திட்டத்தை ராகுல் காந்தி கடுமையாக எதிர்க்கிறார். மத்திய பிரதேசத்தில் காங் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது. கோதாவரி காவிரி இணைப்புத் திட்டத்தை தெலங்கானா காங்கிரசு அரசு ஏற்க மறுக்கிறது.