போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை
அரியாங்குப்பம்: போக்சோ வழக்கில் ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தவளக்குப்பம் அடுத்த பூரணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தனஞ்ஜெயன், 30; குடும்ப பிரச்னையில் இவரது மனைவி சினேகாவை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அவர், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால், புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் தனஞ்ஜெயன் மீது வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.
காலாப்பட்டு மத்திய சிறையில் இருந்த இவர், கடந்த ஆண்டு, ஜாமினின் வெளியில் வந்தார். இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வயலுக்கு அடிக்கும் களைக்கொல்லி மருந்தை குடித்தார். ஜிப்மரில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இதுகுறித்து, தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement