397 கி.மீ., பயணித்த அரசு பஸ் வருவாய் ரூ.355
மூணாறு, செப்.7–-
கேரளாவில் ஓணம் பண்டிகை ஆக.26ல் கொண்டாடப்பட்டது. அந்த பண்டிகைக்காக கண்ணூர் மாவட்டத்தில் இயக்க மூணாறு டெப்போவில் இருந்து அரசு விரைவு பஸ் அனுப்பி வைக்கப்பட்டது. பண்டிகை காலம் ஓட்டம் முடிந்து பஸ்சை மூணாறு டெப்போவுக்கு அதிகாரிகள் வரவழைத்தனர். வரும் போது மூணாறு என போர்டு வைத்து பஸ்சை இயக்குமாறு அறியுறுத்தி இருந்தனர். அவ்வாறு இயக்கப்பட்ட பஸ் 397 கி.மீ., தூரம் பயணித்து மூணாறு டிப்போவுக்கு வந்தது. டிரைவர், கண்டக்டர் ஆகியோர் டிக்கெட் மிஷினுடன் கணக்கை ஒப்படைத்தனர். அதில் 397 கி.மீ., தூரம் ஓடிய பஸ்சில் மூன்று பயணிகள் மட்டும் ஏறியதாக ரூ. 355 ஐ பஸ் கண்டக்டர் ஒப்படைத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போக்குவரத்து அதிகாரிகள் இச்சம்பவம் பற்றி துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டாக்டர்களை தாக்கும் அரசியல்வாதிகளை சுதந்திரமாக நடமாடவிடாதீர்கள்; சுப்ரீம்கோர்ட் அதிரடி உத்தரவு
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
Advertisement
Advertisement