ரகளை செய்த 5 பேர் கைது

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசிய ஐந்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மடுகரை போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். கடலுார் மாவட்டம், எல்.என்.புரம் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ், 32, என்பவர் மதுபோதையில் மடுகரை – தொந்திரெட்டிப்பாளையம் முருகன் கோவில் எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசி, ரகளையில் ஈடுப்பட்டார். அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இதேபோல் ரகளையில் ஈடுபட்ட கரிக்கலாம்பாக்கம் ராஜபாண்டியன், 37; சேதாரப்பட்டில் மணிகண்டன், 28; திருபுவனையில் தமிழரசன், 23; வில்லியனுாரில் கார்த்திகேயன், 32, ஆகியோரை அந்தந்த போலீசார் கைது செய்தனர்.  

Advertisement