ரோட்டோர வியாபாரிகளுக்கு கடனுதவி முகாம்
திண்டுக்கல், செப்.6-
திண்டுக்கல் மாநகராட்சியில் ரோட்டோரம் வியாபாரம் செய்பவர்களுக்கு பிரதம மந்திரியின் சுவாநிதி திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் முதல், இரண்டாம், மூன்றாம் தவணைகளாக ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம், ரூ.50 ஆயிரம் வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. இதற்கான சிறப்பு முகாம் மாநகராட்சி அலுவலகத்தில் செப்.,1 முதல் செப்.,30 வரை நடக்கிறது.
இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்றவர்கள் பிரதம மந்திரி சி சம்ரிதி திட்டத்தின் மூலம் 8 வகையான திட்டங்களில் பயன்பெறலாம். இரண்டாம் தவணை கடன் பெற்றவர்கள் கடன் அட்டை பெற முடியும்.
எனவே ரோட்டோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டிற்காக கடனுதவி பெற்று பயனடைய இந்த முகாமில் பங்கேற்கலாம். கடனுதவி பெற விரும்புவோர் ஆதார் அட்டை, வங்கிக்கணக்கு புத்தகம், ரேஷன் கார்டு நகலுடன் நேரில் விண்ணப்பிக்க வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் பிரேம்ஆனந்த் தெரிவித்தார்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி