கல்லுாரியில் படிப்பு ஆலையில் பயிற்சி
திருப்பூர், செப்.6–
படிப்பு முடித்து வேலை தேடும் இளைஞர்களுக்கு, படிக்கும் காலத்திலேயே தொழில் அனுபவம் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும் தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் இணைந்து நடத்திய கருத்தரங்குக்கு, சங்கத்தின் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நல துணைக்குழு உறுப்பினர் கந்தசாமி, ‘யங் டீ’ துணைக்குழு உறுப்பினர் முகமது ஹாசிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரிய இயக்குனர் விஜய் சங்கர் பாண்டே, உதவி இயக்குனர் பவுல் எட்வர்ட் ஆகியோர் கூறியதாவது:
பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ முடித்த இளைஞர்கள், இத்திட்டம் மூலம் தொழில்துறையில் நேரடி அனுபவத்தையும் நடைமுறைத் திறனையும் பெறலாம். நிறுவனங்களும் தங்கள் தேவைக்கேற்ப திறமையான மனிதவளத்தை உருவாக்கிக் கொள்ள முடியும். டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படிக்கும் காலத்திலேயே நிறுவனங்களில் பயிற்சி பெற்று, பின்னர் நிரந்தர வேலைவாய்ப்புக்கான வாய்ப்பையும் இளைஞர்கள் பெறலாம். நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான தொழிலாளர் விவரங்களையும் பதிவு செய்யலாம்.
தொழில்பழகுநர் பதிவு மற்றும் மானிய நடைமுறைகளுக்கு இடைத்தரகர்களை அணுகாமல், மத்திய அரசின் பயிற்சி வாரியத்தை நேரடியாக தொடர்புகொள்ளலாம். தொழில்துறைக்கு தேவையான திறமையான மனிதவளத்தை உருவாக்குவதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக்கான நடைமுறை அனுபவத்தையும் வழங்குவதில், தேசிய தொழில் பழகுநர் பயிற்சித் திட்டம் முக்கிய பங்காற்றும்.
––
லெப்ட் சைட் உள்ளவரை கட் செய்யவும்
–––
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்த கருத்தரங்கில் பங்கேற்ற மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரிய இயக்குனர் விஜய் சங்கர் பாண்டேவை தொழிலாளர் மற்றும் தொழிலாளர் நல துணைக்குழு உறுப்பினர் கந்தசாமி, ‘யங் டீ’ துணைக்குழு உறுப்பினர் முகமது ஹாசிம் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும்
-
மனதை உலுக்கிய 11 விநாடி வீடியோ... டில்லி கட்டட இடிபாடுகளில் சிக்கியபடி உதவி கேட்ட மாணவன் மீட்பு
-
வார தொடக்கத்தில் சரிந்தது தங்கம் விலை; சவரனுக்கு ரூ.480 குறைவு
-
விரைவில் பிரதமர் மோடியை சந்திப்பேன்; சொல்கிறார் ஷேக் ஹசீனா
-
குற்றவாளி எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் நடவடிக்கை: முதல்வர் விஜய் திட்டவட்டம்
-
தமிழக அரசின் தாய் மாமன் திட்டம்: தங்க மோதிர பார்சல் அனுப்பும் பணி துவக்கம்
-
அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலி