சிவபாரதி பள்ளியில் ஆசிரியர் தின விழா 

விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த சிறுவரப்பூர் சிவபாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. 

விழாவிற்கு, பள்ளி தாளாளர் சிவநேசன் தலைமை தாங்கி பேசினார். முதல்வர் ஆனந்த பாஸ்கர் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் சரண்யா,  துணை முதல்வர் பரமேஸ்வரன், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 

விழாவில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியை சுபாவை, நடப்பு கல்வியாண்டின் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்து, நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. மேலும், அவருக்கு 30 ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது. 

Advertisement