261 பேருக்கு கல்வி உதவி தொகை தேயிலை வாரியம் அறிவிப்பு
குன்னூர்:
சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பிள்ளைகள் 261 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக தேயிலை வாரியம் அறிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இந்திய தேயிலை வாரியத்தின் சார்பில், சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல்வேறு நலதிட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தேயிலை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் பயிலரங்குகள் வாயிலாக விவசாயிகளுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படுகின்றன. சந்தையில் உற்பத்தியாகும் தேயிலை, தேயிலை தொழிற்சாலைகள், விவசாயிகள் வழங்கும் பசுந்தேயிலைக்கு உரிய நியாயமான ஆதாய விலை கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது.
வாரிய செயல் இயக்குனர் பரணிகுமார் கூறுகையில்,
‘‘ கடந்த ஆக., மாதத்தில் சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகள், 261 பேரும் கல்வி உதவிதொகை வழங்கப்பட்டு உள்ளது. பட்டியலின துணை திட்ட நிதியுதவியின் கீழ், 16 சிறு தேயிலை விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. என்றார்.
மேலும்
-
கோபால்சுவாமி கோவிலில் உறியடி விழா கோலாகலம்
-
சமூக நீதி, நலத்திட்ட செயல்திறன் குறித்து பிரதமர் மோடி தலைமையில் இன்று ஆய்வு
-
பாலம் அமைக்கும் பணிகள் தாமதம் மக்கள், மாணவர்கள் தவிப்பு
-
பள்ளியில் ஆசிரியர் தின விழா பரிசு வழங்கிய மாணவர்கள்
-
விபத்தை தவிர்க்க ஓட்டுநர்கள் கவனமாக இருக்கணும்! முக்கிய 'ஸ்பாட்'களில் போலீசார் ஆய்வு
-
மூடுகால்வாயில் விஷவாயு தாக்கம் அடைப்பை நீக்க பணியாளர்கள் அச்சம் வேளச்சேரிக்கு வெள்ள அபாயம்