ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
மதுரை: ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டி: யார் மீதும் எந்த பழிவாங்கல் நடவடிக்கையும் எடுக்க முடியாது. சும்மா பொய்யான வழக்கு எல்லாம் போட முடியாது. ஆதாரங்கள் இருந்தால் வழக்கு போடுவார்கள். போன முறை முன்னாள் அமைச்சர் நேருவுக்கு பணம் வாங்கி அரசு பணிக்கு ஆள் சேர்ந்ததாக கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆதாரங்களுடன் அனுப்பி இருந்தார்கள்.
நிறைய ஊழல்கள், முறைகேடுகள் எல்லாமே கூட்டு சதி என இரண்டு முறை கோர்ட்டில் அமலாக்கத்துறை ஆதாரங்களை சமர்பித்து இருக்கிறது. அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அந்த வழக்கை பதிவு செய்து இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஏது சம்பந்தமாக என்று தெரியவில்லை. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தான் விளக்கம் அளிக்க வேண்டும். சம்மன் எல்லாம் அனுப்பி விசாரணை நடத்துவார்கள். ஊழல் செய்தால், தவறு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது.
ஆதாரங்கள் இருக்கும் போது எப்படி தப்பிக்க முடியும். அதனால் யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏது எல்லாம் ஆதாரம் இருக்கிறதோ சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். மின்வாரியத்தில் 45 டெண்டர்களில் முறைகேடுகள் இருக்கிறது.
அது எல்லாம் எந்த கால கட்டத்தில் நடந்துள்ளது என்பதை சொல்ல வேண்டும், அது இல்லாமல் கோர்ட்டில் நிரூபிக்க முடியுமா? சரியான முறைகேடுகள் மக்களின் பணம் தவறாக பயன்படுத்தும் பட்சத்தில் வழக்குகள் பதிவு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
அப்படி என்றால் இன்று ஒட்டுமொத்த திமுக அமைச்சர்களும், அவர்களின் விசுவாசிகளும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கவேண்டும். இல்லையே. அவர்கள் தண்டனையிலிருந்து தப்பி விட்டார்களே...
ஊழல் ராசா க்கள் ஒன்னும் பயந்த மாதிரியே தெரியலையே, ஏதாவது செட்டில்மென்ட் ஆகி விட்டதா
இதே. நேருவும். தவெ கவில் அடைக்கலம். புகுந்துவிட்டால். எந்த. நடவடிக்கையும். இருக்காது கட்சி ஆட்சிக்கு. வந்து. நாலு. மாதம். ஆகும். முன்பே. புலிப்பாய்ச்சலில். லஞ்சம். ஊழலில் கரைகண்டுவிட்ட. இவர்கள். யாரையும். விடாது. பிடித்துவிடுவார்களாம் காமராஜர் கூறியது. போல. இது. மூன்றாவது. மட்டை அவ்வளவுதான்
சூப்பர்
இவ்ளோ நாளாச்சு இன்னமும் என்ன நடவடிக்கை
ஒரெ சாக்கடை வசனம். இது பம்மாத்து வேலை.
ரெண்டு விஜயபாஸ்கர்களும் ரொம்ப நல்லவங்க. அதனால் நடவடிக்கை கிடையாது.
இவர்கள் பேசும் வசனங்கள் ரீல்ஸ் க்கு உதவும்..... real க்கு ஆகமாட்டார்கள் .....மங்குணிகள்.
தலைப்பு 'ஊழல் செய்த யாரையும் இதுவரை தண்டிக்க முடியவில்லை' என்று இருந்திருக்க வேண்டும்! அதுதான் உண்மையான நிலைமை! ஒத்துக் கொள்ள முடியாமல் பூசி மெழுகுகிறார்! குறை சொல்லி கருத்து போடவில்லை! நாட்டு மீது அக்கறையில் இப்படி சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறோம்.
இந்த வசனத்தை பேசிக்கொண்டே இருங்க எந்த நடவடிக்கையும் கிடையாது நேரு மீது எஃப் ஐ ஆர் போட்டும் ஏன் கைது செய்யவில்லை.